தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் 5 தினங்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி இரவு 10 மணிக்கு பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். ஆனால் கோவையில் பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை எப்போதும் மதிப்பதில்லை. இரவு 10 மணிக்கு பின்னரும் தேர்தல் பிசாரம் செய்கிறார்கள்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை ஆவாரம்பாளையம் 28வது வார்டு பகுதியில் நேற்று இரவு 10.40 மணி அளவில் பிரசாரம் செய்தார். இதைப்பார்த்த திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி நிர்வாகிகள், 10 மணிக்கு மேல் நீஙகள் ஏன் பிரசாரம் செய்கிறீர்கள் ? என திமுகவினர் கேட்டனர்., அப்போது பாஜகவினர், அப்படித்தான் செய்வோம். உஙு்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளு்ங்கள் என்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. திடீரென திமுகவினரை பாஜகவினர் உருட்டுகட்டை, இரும்பு தடி ஆகியவற்றால் தாக்கினர். இதில் திமுகவினர் மண்டை உடைந்தது. படுகாயங்களுடன் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அறிந்த வேட்பாளர் கணவதி ராஜ்குமார், மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் கூடியிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த களேபரங்களுக்கு இடையே, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் அண்ணாமலையின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனிடையே தங்களை தாக்கிய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் குணசேகரன் என்பவர் போலீசில் புகார் செய்தார்.