இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டசபைகளின் பதவிகாலம் மார்ச் மாதத்தில் முடிவடைவதால், இந்த 3 மாநிலங்களுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டில்லியில் அறிவிக்கிறது. தற்போது திரிபுராவில் பாஜக ஆட்சியும், மற்ற இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் கூட்டணி அரசும் நடைபெறுகிறது.