காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை பாளையங்கோட்டையில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வருகிறார். கோவை எல்.அண்ட்டி சாலையில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்று கோவை, பொள்ளாச்சி, தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.