தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். முசிறி சட்டமன்ற தொகுதி, தா. பேட்டை ஒன்றியத்தில் உள்ள அயித்தாம்பட்டி, தும்பலம், வாளசிராமணி, வேலம்பட்டி, ஊரக்கரை, தா.பேட்டை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, வேட்பாளர் பாரி்வேந்தர் பேசியதாவது:
நான் கல்வியாளன் என்பதால் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டிடங்கள்,
வகுப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளேன். சமுதாயக்கூடம், ரேஷன் கடைகள் என புது கட்டிடங்கள் கட்டிக் கொடுத் துள்ளேன். 1,200 மாணவ, மாணவி களுக்கு இந்தியாவிலேயே எவரும் செய்யாத அளவிற்கு 118 கோடி ரூபாய் எனது சொந்த நிதியிலிருந்து செலவு
செய்து உயர் கல்வி இலவசமாக அளித்துள்ளேன். இந்த சேவைகள் தொடர மீண்டும் என்னை வெற்றி பெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின்போது, ஐஜேகே மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் சத்தியநாதன், வரதராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கருணாகரன், பா. ஜனதா பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற பொறுப்பாளர் லோகிதாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.