Skip to content
Home » சிதம்பரம் பாஜக வேட்பாளருக்கு விசிக எதிர்ப்பு….. பிரசாரத்தில் பரபரப்பு

சிதம்பரம் பாஜக வேட்பாளருக்கு விசிக எதிர்ப்பு….. பிரசாரத்தில் பரபரப்பு

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிநேற்று  அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே
எனக்கு வாக்குகளியுங்கள் எனக்கூறினார். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அரியலூர் ஒன்றிய பொருளாளர் பூமிநாதன், பிரச்சார வாகனத்திற்கு முன்பு வந்து, பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை பார்த்து,
பேசாதேவாயை மூடு!  …….வாயை மூடுமா எனக்கூறி கூட்டத்துக்கு முன்பு சென்றார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பூமிநாதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


அதேசமயம் பிரசாரத்தில்  ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, தனது பிரசாரத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினார்.  இந்த சமுதாயத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தாதீர்கள்.
. நான் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்த பெண். உங்களிடம் நான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.
இந்த சமுதாயத்தில் ஒரு தொழிலதிபர் உள்ளரா. ஆண்டாண்டுகாலம் கையை கட்டிதான் நிற்கிறோம் .
நீங்கள்  எனக்கு வாக்களித்தால் மோடி அய்யாவிடம் பேசி ஒவ்வொரு கிராமத்திலும் பெண்கள் முன்னேற 10 லட்சத்தில்  இருந்து 50 லட்சம்வரை உதவிநிதி  பெற்றுத்தர வாய்ப்புள்ளது.. இது உங்களுக்கு தெரியுமா? என்னை தேர்ந்தெடுங்கள் .

இவ்வாறு அவர் பேசிவிட்டு அடுத்த கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!