கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இன்று முக்கிய நிகழ்வான பூமிதி திருவிழா மிகவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம், கரும்புத் தொட்டில், அழகு, அக்னி சட்டி உள்ளிட்டவைகளை எடுத்து நேர்த்திக்கடனை செய்ய அமராவதி ஆற்றில் இருந்து தான்தோன்றி மலை முத்து மாரியம்மன் ஆலயம் வரை முக்கிய வீதியில் வழியாக சுட்டெரிக்கும் வெயிலிலும் பொறுப்பெடுத்தாமல் நடந்து வந்து ஆலயம் வந்து ஆலய
வாசலில் அமையப்பெற்ற பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செய்தனர்.
இதில் 1000க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும், 1000க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். பக்தர்கள் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பாக அன்னதானமும், நீர்மோர் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர். பூக்குழி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தான்தோன்றி மலை போலீசார் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஆலயம் அருகே பிரத்தியேக மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது.