கடந்த 2 மாதத்திற்கு முன்னரே பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என்ற செய்தி பாஜ கட்சியால் பரப்பப்பட்டது. தேர்தல் நெருங்கிய நேரத்தில் பெரும்பாலான ஊடகங்கள் பாஜகவின் கருத்தை அப்படியே பிரதிபலித்தன. ஆனால் தேர்தல் நெரு்ங்கும் நேரத்தில் பாஜகவே அதை சொல்ல தயங்குகிறது.
காரணம் வட மாநிலங்களிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட்டுள்ள வலைத்தள பதிவு பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளது.
குரேஷி தனது வலைத்தள பதிவில் கூறியுள்ளதாவது: இப்போது 400+ என்கிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில், இது 175 முதல் 200-க்கு வந்து விடும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழங்களின் விலையைப் பற்றி பேசுகிறேன். அனைத்துப் பதிவுகளும் அரசியலை பேசவேண்டும் என்பதில்லை என பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
முன்னாள் தலைமை தேர்தர் ஆணையர் பா.ஜ.க.வையே மறைமுகமாக சாடியுள்ளார் என வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.