திருச்சியில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கார்களுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார். தலை, நெஞ்சு, விலா, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயத்துடன் அந்த பெண் குற்றுயிராக திருச்சி சத்திரம் ப்ரண்ட்லைன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். உடனடியாக அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபத்தை கவனித்தபோது அந்த பெண் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. காரணம் பல உறுப்புகள்அடிப்பட்டு மூளை, முகம், நுரையீரல், வயிறு, கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது.
2 பல உறுப்புகள் அடிப்பட்டு மூளை, முகம், நுரையீரல், வயிறு, கல்லீரல் பாதிப்பு. அத்துடன் அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததால் அதிக அளவு ரத்தம் செலுத்தப்படவேண்டியதும் இருந்தது. நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான ரத்தம் பெற்ற மருத்துவர்கள் தாமதமின்றி அந்த பெண்ணுக்கு ரத்தம் ஏற்றினர். 30 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது.
உடனடியாக வயிற்றில் அறுவை சிசிக்சை செய்தால் தான் அவரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் டாக்டர். S.ராதாகிருஷ்ணன், டாக்டர் S.ஆனந்த், டாக்டர் வசந்த் ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழு அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைமேற்கொண்டது.
டாக்டர்.s.ராதாகிருஷ்ணன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர்
டாக்டர் s. தண்டபாணி, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்.
டாக்டர் K. ராஜேஷ் குமார், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர்.
டாக்டர் S. ஆனந்த், இரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர்.
டாக்டர் P. சுப்ரமணி, முகம் மற்றும் பல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்.
டாக்டர் வசந்த் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்.
டாக்டர் ஆனந்த், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்.
டாக்டர் மதன்மோகன், நுரையீரல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்.
டாக்டர். கார்த்திகேயன், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்.
டாக்டர் கணேஷ் அரவிந்த், சிறுநீரக சிகிச்சை மருத்துவர். ஆகிய மருத்துவர்கள் ஒவ்வொருவரும் திறமையாக செயல்பட்டு, இது போல் பல நோயாளி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ரத்தக்கசிவு மிகவும் அதிகமாக இருந்ததாலும், வலது கல்லீரல் சிதைந்து இருந்ததாலும் Packing System மூலம் ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண்ணுக்கு, நுரையீரல் பாதிப்பும் ரத்த தட்டணுக்கள் குறைவாக இருந்ததாலும் தேவையான செயற்கை சுவாசமும், ரத்த அணுக்களும் செலுத்தப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து மறு அறுவை சிகிச்சை செய்து Packing System எடுக்கப்பட்டு முழுமையாக ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது.
சுல்லீரல் நல்ல நிலையில் இருந்ததால் Preservation Surgery செய்யப்பட்டது. தற்போது அந்த பெண் பூரண குணமாகி சுகமாக இல்லம் திரும்பினார்.
சாலை விபத்தில் அடிப்பட்டு ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்பட்டால், ப்ரண்ட்லைன் மருத்துவக்குழுவின் மருத்துவர்கள்
உடனடியாக கவனித்து மருத்துவமனையின் Standard Protocol முறையில் வைத்தியம் பார்ப்பதால் நோயாளிகள் பயன்பெறுகிறார்கள்.
தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் முழுமையாக செயல்படுவதால் எண்ணற்ற நமது பகுதி நோயாளிகள் மிகவும்ஆபத்தான நிலையில் வந்து உயிர் காப்பாற்றப் பட்டுள்ளனர் என்று ப்ரண்ட்லைன் மருத்துவர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.