நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு, வாட்டக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது;
தேர்தல் நேரம் என்பதால்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று காலை பல்வேறு பணிகளுக்காக வந்த அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவலர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு கையில் பையுடன் வந்த முதியவர் ஒருவர், தண்ணீர் பாட்டிலில் தயாராக கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி திடீரென தீவைத்துக்கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பரவி அலறி துடித்து கீழே வி சாய்ந்தார்.
இதனைக் கண்ட அதிவிரைவு படை போலீசார் 10, க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்த கழிவறை குழாயில் ஓடிச் சென்று கேனில் தண்ணீர் கொண்டு வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருந்த போதும் 10,நிமிடத்திற்குள் முதியவரின் உடல் பாதிக்கும் மேல் தீக்காயத்தால் கருகியது. இதையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸில், காவலர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் தீ குளித்த நபர் கொண்டு வந்திருந்த பையை போலீசார் சோதித்துப் பார்த்தபோது, அதில் வங்கி புத்தகம்,ஆதார் அட்டை, செல்போன் இருந்தது பெரிய வந்தது.
விசாரணையில் தீ குளித்து உடல் கருகிய நபர், நாகை மாவட்டம் தலைஞாயிறு வாட்டக்குடி நடுத்தெருவை சேர்ந்த சேகர் (61) என்பதும் இவரது மனைவி மகன்கள் சமீபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, மனநலமும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
நாகை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தலைஞாயிறு அடுத்த வாட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சேகர் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ குளித்து கருகிய சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.