பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நத்தக்காடு, தேனூர், தொட்டியப்பட்டி, கண்ணாப்பாடி, து.களத்தூர், எலந்தலப்பட்டி, அடைக்கம்பட்டி, நக்கசேலம், புதுஅம்மாபாளையம்,
ஈச்சம்பட்டி,பழைய விராலிப்பட்டி, புதுவிராலிப்பட்டி, சிறுவயலூர், மங்கூன், குரூர், மாவிலங்கை, செட்டிக்குளம்,மலையடிவாரம், நாட்டார்மங்கலம்,கூத்தனூர், இரூர், பெருமாள்பாளையம், ஆலத்தூர்,திருவிளக்குறிச்சி, பாடாலூர், மருதடி, விஜயகோபாலபுரம், நாரணமங்கலம் ஆகிய
கிராமங்களில் சுமார் 35 இடங்களில் வாக்குகள் சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் கே.என். அருண் நேரு பேசியதாது,
தமிழகத்தில்
முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டம், மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை திட்டம், மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 19 -ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று என்று வேட்பாளர் கே.என்.அருண் நேரு பேசினார்.
இந்த பிரச்சாரத்தில் பெரம்பலூர்
மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன்,
ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி, மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செ.வல்லபன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின், கொளக்காநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் என்.ராகவன், காங்கிரஸ் கட்சி தேனூர் கிருஷ்ணன்,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், ஆர்.அருண், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால்,
மற்றும் தேனூர் நல்லுசாமி, து.களத்தூர் கண்ணபிரான், மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, கிளைச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.