அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 27, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு பொருட்களை பிரித்து அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு பொருட்களான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடு, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய
படிவங்கள், படிவத்தை பாதுகாப்பாக வைப்பதற்கான பெட்டிகள், வாக்காளர் பட்டியல், வாக்காளர்களுக்கு வைக்கப்படும் அழியாத மை குப்பிகள், எழுதுபொருட்கள், முத்திரைக்கு பயன்படுத்தக்கூடிய அரக்குமெழுகு உள்ளிட்ட சுமார் 180 பொருட்கள் தொடர்புடைய கோட்டாட்சியர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து வாக்குப்பதிவு பொருட்களும் விடுபடாமல் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழ்ச்செல்வன், வட்டாட்சியர் (தேர்தல்) வேல்முருகன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.