மயிலாடுதுறை நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அந்த சிறுத்தையை வனத்துறையினர் தேடி வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உள்ள தேரழுந்தூரில் சிறுத்தை நடமாடுவதாக பழைய வீடியோ பதிவை வெளியிட்டு இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பரப்பினார். இதையடுத்து வனத்துறையினர் தேரழுந்தூர் சென்று அங்கு
தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் அந்த வீடியோ போலியானது என தெரிய வந்தது. இந்நிலையில் போலி வீடியோ பதிவிட்டது குறித்து சம்பந்தப்பட்ட இளைஞர் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.