பாராளுமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவிற்கு உதவி செய்யலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தின் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்றிவு திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் போலீசாரின் பாதுகாப்புடன் இந்த சோதனை சுமார் 3 மணி நேரம் நடந்தது.