மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதன்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப்பணம் எடுத்து செல்லக்கூடாது. அதற்கு மேல் எடுத்து செல்ல வேண்டுமானால் அதற்கான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அத்துடன் தேர்தலையொட்டி அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் ரயில் நிலையத்தி்லும், ரயிலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே போலீசார் உறுதி செய்துள்ளனர். திருச்சி ரயில் நிலையத்தில் தற்போது போலீசார் இரவு பகலாக பயணிகளிடம் சோதனை நடத்தி வருகிறார்கள். எஸ்.எஸ்.ஐ. பாலமுருகன் தலைமையில் போலீசார் பயணிகளின் உடமைகள், சூட்கேஸ்கள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய சோதனை நடத்தினர். தேவையான நேரத்தில் மெட்டல் டிடெக்டர் சோதனையும் நடத்தப்படுகிறது. ரயில்வே போலீஸ் அதிகாரிகள், போலீசார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.