புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகள் போட்டி முடிந்ததும் லாரியில் ஏற்றப்பட்டு ஊருக்கு கொண்டு செல்லும்போது திருவரங்குளம் என்ற இடத்தில் லாரியும், அரசு பஸ்சும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் லாரியில் இருந்த 2 பேர் பலியானார்கள். அத்துடன் லாரியில் ஏற்றப்பட்டிருந்த 2 ஜல்லிக்கட்டு காளைகளும் உயிரிழந்தன.