அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை (Second Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 27.சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 149.அரியலூர் மற்றும் 150.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) ஆகியவைகள் முதற்கட்டமாக சுழற்சி முறையில் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று, இயந்திரங்கள் அந்தந்த பகுதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு பெரம்பலூர் மாவட்டத்திலும், புனவகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு கடலூர் மாவட்டத்திலும் முதற்கட்ட சுழற்சி முறையில் தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்ட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று, அந்தந்த தொகுதி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள இருப்பறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் கட்டமாக இன்று (04.04.2024) வாக்குச்சாவடி மையங்களுக்கு சுழற்சி முறையில் பிரிக்கும் பணி அங்கீகரிக்கப்ட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 27.சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு 306 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM), 306 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT), ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு 290 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM), 290 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT), குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 320 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM), 320 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT), காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு 250 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM), 250 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT), புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு 283 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM), 283 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT), சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு 260 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM), 260 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT), சுழற்சி முறையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக (Reserve) 342 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM), 512 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT) இருப்பில் உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி.ராஷ்மி ராணி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, ஷீஜா (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுமதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பொறுப்பு அலுவலர் மோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் (பெரம்பலூர்) சுந்தர்ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் (புவனகிரி) ராஜீ, உதவி ஆணையர் (கலால்) காட்டுமன்னார்கோவில் சந்திரகுமார், மாவட்ட தகவலியல் மைய அலுவலர் ஜான் பிரிட்டோ, வட்டாட்சியர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.