நாகையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 29, ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது. இன்று 8,ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்றதை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து மங்கலம் வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. மல்லாரி ராகம் முழங்க, கடமானது கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள், நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலின் கோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனித நீர்
ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை வெகு விமர்சையாக நடத்தினர்.அதனை தொடர்ந்து பக்தர்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரணை காண்பிக்கப்பட்டது.17,ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வேண்டி, தரிசனம் செய்தனர்.