பொங்கல் பண்டிகையின் 3ம் நாளான இன்று தமிழக முழுவதும் காணும் பொங்கல் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் காணும் பொங்கலை ஒட்டி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மேலும் கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரகதீஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் ஆராதனையில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
காணும் பொங்கலை ஒட்டி இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் காணு ம் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.