போதை பொருள் கடத்தல் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜாபர் சாதிக்குடன் இணைந்து டைரக்டர் அமீர் சினிமா தயாரித்து வந்தார். அதிகாரிகள் என்னை அழைத்தால் விசாரணைக்கு ஆஜராவேன் என்று டைரக்டர் அமீர் கூறி இருந்தார்.
இந்த நிலையில் அவரை இன்று டில்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ அனுப்பப்பட்டது. அதற்கு அமீர், ரம்ஜான் முடிந்ததும் ஆஜராவதாக பதில் அனுப்பி இருந்தார். அதை அதிகாரிகள் ஏற்காததால் அவர் இன்று டில்லி சென்று அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.