தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஏறத்தாழ 1,930 கிலோ மீட்டர் பயணம் செய்து முதலமைச்சர் அவர்கள் ஏறத்தாழ 2 கோடி மக்களைச் சந்தித்துள்ளார். இந்தத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது, பா.ஜ.க. அரசின் பாசிச, மத வெறி போக்கை மக்களிடம் எடுத்துரைத்து வருகிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படையில் சாதி மத மொழி இன வேறுபாடுகளின்றிச் சகோதரர்களாக கூடி வாழும் மக்களிடையே பேதத்தை வளர்க்கிறது பா.ஜ.க. அரசு. எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் விலைகளை தாறுமாறாக உயர்த்திவிட்டது பா.ஜ.க. ஆட்சி, அதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உட்பட எல்லாப் பொருள்களின் விலைவாசிகளும் உயர்ந்துவிட்டன என்பதைக் சுட்டிக்காட்டுகிறார்.
தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. புரிந்துள்ள மாபெரும் இமாலய ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார். இதனால், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியின் கூடாரம் கலகலத்து விட்டது. இப்படி, மக்களின் பிரச்சினகைளக் கவனிக்காமல், மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தியுள்ள பா.ஜ.க. மற்றும் அ,தி.மு.க. பாட்டாளி மக்கள் கட்சி முதலான சந்தர்ப்பவாத கட்சிகளின் வேட்பாளர்களை தோல்வியுறச் செய்து, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்றும் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி அரசு அமைந்திட உதவ வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
முதல்-அமைச்சரின் இத்தகைய பிரச்சாரமும், எளிமையான அவருடைய அணுகுமுறைகளும் இந்தியா கூட்டணியின் செல்வாக்கினை மக்களிடையே வளர்த்துள்ளது. பா.ஜ.க. முதலான கட்சிகளுக்கு எதிரான சிந்தனைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. எஞ்சியுள்ள நாட்களில் இந்தச் செல்வாக்கு மேலும் அதிகரித்து தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலங்களிள் 40 தொகுதிகளையும் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வெல்லும்!. நாடு முழுவதிலும் இந்தியா கூட்டணி வென்று ஆட்சியை அமைக்கும்! இதை தேர்தல் முடிவுகள் சொல்லும்!. இது உறுதி என்பதை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரப் பயணம் நிரூபித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.