இந்தியா கூட்டணியின் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் 13 ந்தேதி கோவை வருகை தர உள்ளார். அதற்கான பணிகள் செட்டிபாளையம், எல் அண்ட் டி புறவழிச்சாலையில் நடைபெற்று வருகின்றது.அந்த பணிகளை தமிழக அமைச்சர் சு.முத்துச்சாமி ஆய்வு செய்தார்.
இந்தியா கூட்டணியின் கோவை – பொள்ளாசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து 13 ந்தேதி மாலை 5 மணிக்கு கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டு வரும் தேர்தல் பிரச்சார மேடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் திட்டமிட்டதற்கு மேல் அதிகமானோர் வந்ததால், கோவையில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க கூடிய அளவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றும், இதில், இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆய்வின்போது, கழக துணைப்பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ,, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், தொண்டாமுத்தூர் தொகுதி பொறுப்பாளர் சிந்து ரவிச்சந்திரன், மாணவரணி மாநில துணைச்செயலாளர் விஜி.கோகுல், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகு, துணை அமைப்பாளர் சாதிக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.