தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், அம்மா வேடத்திற்கும் பெயர் பெற்றவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபமடைந்த நடிகை சரண்யா, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஆபாசமாகத் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, பக்கத்து வீட்டுப்பெண் ஸ்ரீதேவி சிசிடிவி காட்சிகளை சமர்பித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மணி ரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் ஜோடியாக ‘நாயகன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர், ’எம்டன் மகன்’, ‘விஐபி’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோவின் அம்மாவாக சிறப்பான நடிப்பைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது இவரது கைவசம் ‘இடி முழக்கம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘பிரதர்’ உள்ளிட்டப் படங்கள் கைவசம் வைத்துள்ளார்.