Skip to content
Home » இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருமுறை, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் மாதாந்திர பாஸ் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சுங்கக் கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தரப்பினர், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்ததுவதற்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின், கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என  அவர் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் கடும் எதிர்ப்பு மற்றும் மக்களவை தேர்தல் காரணமாக சுங்கக் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தவில்ல.

உயர்த்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்று சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் முதல் வாரத்தில்   சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.  கேஸ் விலை, பெட்ரோல் விலை குறைப்பு போல, இதுவும் ஒருவகையான தேர்தல் கால சலுகையாகவே கருதப்படுகிறது. தேர்தல் முடிந்ததும்  விடுபட்ட மாதத்திற்கும் சேர்த்து வசூலித்து விடலாம் என்று   மத்திய அரசு  கருதுவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *