தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தனராஜ் (22). இவர் தனது நண்பர்களுடன் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்குச் சென்ற நண்பர்கள், அங்கிருந்து நடந்து சென்று டால்பின் நோஸ் சுற்றுலாப் பகுதிக்கு சென்றுள்ளனர். கொடைக்கானலில் உள்ள ஆபத்தான சுற்றுலா இடங்களுள் டால்பின்நோசும் ஒன்று. டால்பின் மீனின் மூக்குப்பகுதி போன்று இந்த பாறை அமைந்துள்ளதால் இந்த இடம் இந்த பெயர் பெற்றுள்ளது. ஆபத்தை உணராத தனராஜ் செல்ஃபி எடுக்க டால்பின் நோஸ் பாறை பகுதியில் முனைப்பகுதிக்கு சென்ற தனராஜ் எதிர்பாராத விதமாக கால் தவறி சுமார் 100 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்து கயிறு கட்டி 100 அடி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் தனராஜை உயிருடன் மீட்டனர். அவருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. தனராஜ் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கொடைக்கானல் டால்பின் நோசில் செல்பி… 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர்…
- by Authour