திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராமையா . இவர் இன்டிரியர் ஒர்க் தொழில் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தரைதளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
மேலும் இரண்டாவது தளத்தில் தனது தொழிலுக்கான அலுவலகத்திற்கு ஒரு புறமும் அமைத்தும் மறுபுறத்தில் உடற்பயிற்சி செய்வதற்கும், மற்ற உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ராமையா உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பெயரில் திருவெறும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் லேப்டாப்புகள் கோப்புகள், உடற்பயிற்சி சாதனங்கள் ஆகியவை தீயில் கருகி எரிந்து சாம்பலானது. மேலும் இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்த தீ விபத்தில் மேல் தளத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் விபத்து தவிர்க்கப்பட்டது