டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கான அமலாக்கத்துறை கஸ்டடி நாளையுடன் முடிவடைகிறது. இவ்வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட கோவா ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அமித் பலேகரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கெஜ்ரிவாலின் செல்போன் நம்பருக்கு வந்த போன்கால்கள், அதன் உள்ளடக்க விவரங்களை அறிவதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்க துறை நாடியுள்ளது. ஆனால் டேட்டாவை மீட்டெடுக்க பாஸ்வேர்ட் தேவை என்று ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்விவகாரத்தில், கெஜ்ரிவால் தனது செல்போன் பாஸ்வேர்டை அமலாக்கத்துறையிடம் தெரிவிக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே அமலாக்கத்துறையினர் ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…