திருச்சி நாடாளுமன்ற அ.ம.மு.க வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார் – இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்ட விரோதமாக ஒன்று கூடி தேர்தல் பரப்புரை செய்தல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அண்ணாமலை உள்ளிட்ட 700 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.