Skip to content
Home » E.D சீல் வைத்த திருச்சி மணல் குவாரியில் மணல் கொள்ளை… அதிகாரிகள் கவனிப்பார்களா?

E.D சீல் வைத்த திருச்சி மணல் குவாரியில் மணல் கொள்ளை… அதிகாரிகள் கவனிப்பார்களா?

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிட ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருவதும தொடர்பான புகார்களின் அடிப்படையில் 3 மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் திடீர்சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளிச்சென்றனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை 8 மாவட்டங்களில் கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக முறைகேடுகளுக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உடந்தையாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை கோர்ட்டில் குற்றஞ்சாட்டியது. அந்தவகையில் திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி பகுதியில் இரண்டாவது மணல் விற்பனை நிலையத்தையும் அமலாக்கத்துறையினர் மூடி சீல் வைத்து சென்றனர். தடை செய்யப்பட்ட அந்த மணல் அள்ளும் பகுதியில் இரவு நேரங்களில் வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் துணையுடன் மணல் கொள்ளை நடந்து வருவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இவ்வாறாக இன்று மாலை உத்தமர் சீலி பகுதியில்  அமலாக்கத்துறையினரால் சீல் வைக்கப்பட்ட மணல் குவாரியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த 14 டாரஸ் லாரிகள், ஏழு ஹிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளப்பட்டு வருவது தெரிந்ததும் அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்ததோடு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்டைவைகளை கைப்பற்றி முற்றுகை போராட்டம் மேற்கொண்டனர்.  இது தொடர்பாக கொள்ளிடம் போலீசார் , ஸ்ரீரங்கம் தாசில்தார் மற்றும் அதிகாரிகளும் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் திருட்டு மணல் அள்ளுவதை எந்த அதிகாரியும் கண்டுக்கொள்வதில்லை என புகார் கூறி முற்றுகையை கைவிட வில்லை. இதற்கிடையில் மணல் கொள்ளையர்களுக்கு அதேப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனின் எஸ்ஐ மற்றும் போலீசார் உடந்தையாக இருப்பதாகவும் திருட்டு மணல் விவகாரத்தில் எந்த பிரச்சனை என்றாலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரும் எஸ்ஐ ஓருவர் உடனடியாக பொதுமக்களை சமாதானம் செய்து வைத்துவிட்டு மணல் கும்பலை உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிடும்படி கூறி விடுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இன்றைய தினமும் அந்த எஸ்ஐ உடனடியாக லாரிகள் மற்றும் ஹிட்டாச்சிையும் உடனடியாக அனுப்ப முயற்சி மேற்கொண்டதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *