தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் ஶ்ரீ மஹா கணபதி ஆலய 60 வது ஆண்டு பால் குட விழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால் குடத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து, கோயிலை சென்றடைந்தனர். சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. மாலை ஷண்முக அர்ச்சனை நடந்தது. இதன் பின்னர் ஸ்ரீ காஞ்சி தவ முனிவர் திருவுருவப் பட ஊர்வலம் வந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்றனர்.