நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளராக கார்த்திகா அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் புத்தூர் மஞ்சக்கொல்லை சிக்கல் ஆழியூர் பெருங்கடம்பனூர் செல்லூர் ஐவநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஆழியூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் கார்த்திகா அங்குள்ள சலவை செய்யும் கடைக்கு சென்று அங்கு உள்ள பெண்ணிடம் வாக்கு சேகரித்தார் அப்போது துணிகளை சலவை செய்து கொடுத்தும் அருகில் உள்ள பூக்கடைக்கு சென்று வாக்கு சேகரிக்கும் போது பூக்களை கட்டி கொடுத்தும் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசும்போது தான் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்திற்கு பிரதமரை தேர்வு செய்ய செல்லவில்லை என்றும் தமிழகத்தின் உரிமைகளை மீட்க நாடாளுமன்றத்தில் சண்டை செய்யவே செல்ல உள்ளதாக கூறி பிரச்சாரம் மேற்கொண்டார் இந்த பிரச்சாரத்தின் போது மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் மாவட்ட பொருளாளர் மதியழகன் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி தலைவர் ராஜேஷ் தொகுதி செயலாளர் ஆதித்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்