Skip to content
Home » குளித்தலை பகுதியில் பாரிவேந்தர் ஓட்டு சேகரிப்பு…..

குளித்தலை பகுதியில் பாரிவேந்தர் ஓட்டு சேகரிப்பு…..

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி   ராட்சாண்டர்திருமலையில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான தேசிய ஜனநாயக கூட்டணி பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் பிரசாரம் செய்தார். மக்கள்  அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது:

நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் 5 ஆண்டுகளில் தொகுதி மக்கள் சுமார் 1500 குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் உயர் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை இலவசமாக செய்து கொடுப்பேன். அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் . எந்த நேரத்திலும்  என்னை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் பொது ச்செயலாளர் ஜெயசீலன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், சத்தியநாதன், குளித்தலை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாநில துணைத்தலைவர்கள் நெல்லை ஜீவா, இளவரசி, கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ்கண்ணா மாவட்ட செயலாளர் பிச்சை, ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் பாஸ்கர்,

பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார்,கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட கூட்டுறவு துறை துணைத் தலைவர் குளித்தலை சுந்தர் ஜி. தோகைமலை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜாபிரதீப், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ் என்கின்ற பிரபு, அவைத் தலைவர் துரைமுருகன்,மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயசேகரன், குளித்தலை நகர செயலாளர் பிரகாஷ், தோகைமலை ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் நடராஜ், அம்மா பேரவை வசந்த் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *