இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று மயிலாடுதுறையில் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதாவை அறிமுகப்படுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி, அன்பழகன் எம்.எல்.ஏ, காங்கி்ரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். வழக்கறிஞர் சுதாவை மகத்தான வெற்றிபெறச்செய்ய அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.