கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட சபியா நகரில் குழிகள் பறிக்கப்பட்டு
5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 100-ங்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கக்கூடிய இந்த பகுதியில் 5ஜி டவர் அமைக்க அனுமதிக்க
மாட்டோம் என்று கூறி அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படவிருக்கும் செல்போன் டவர் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் செல்போன் டவர் அமைப்பதற்கான எவ்வித தகவலும் அனுமதியும் பெறாமல் பொதுமக்கள் ஒப்புதல் கேட்கப்படாமலும் செல்போன் டவர் அமைக்க பணி நடைபெற்று வருவதாகவும் செல்போன் டவர் அமைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான கதிர்வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக பொதுமக்கள் சார்பாக பள்ளப்பட்டி நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்பதாக தெரிவித்தனர். எனவே குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படவிருக்கும் செல்போன் டவர் பணிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.