Skip to content
Home » சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

இந்திய நாடாளுமன்ற தேர்தலிலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை நேற்று மதியம் வரை தாக்கல் செய்திருந்தனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் 27 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து இன்று
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசிலனை நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி கட்சி வேட்பாளர் நீலமேகம் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது. சுழற்சி வேட்பாளர்களான ராமுவ்காந்தி, பூரணகுமார், சாமிநாதன், சந்திரகாசி, ராஜேஷ் ஆகிய ஐந்து சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்தார். மேலும் பிரதான வேட்பாளர்களான அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சி ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர்களின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அதிமுக ராஜ்குமார், பாஜக பிருந்தா, நாம் தமிழர் கட்சி இரஞ்ஞினி ஆகியோரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்பொழுது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளர்களாக ஐந்து பேரும் சுயாட்சிகளாக ஒன்பது பேரும் சேர்த்து மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 30ஆம் தேதி மதியம் மூன்று வரை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெறலாம். 30-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியான பின்னர், வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அங்கீகாரம் மற்றும் சின்னம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *