நீலகிரி தொகுதி கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா இன்று காலை வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கினார். திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனுவி்ல் குளறுபடிகள் இருப்பதாக கூறி மனுவை நிறுத்தி வைத்தார். அதுபோல அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மனுவையும் நிறுத்தி வைத்தார். அதுபற்றி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து திமுக, அதிமுக மனுக்கள் ஏற்கப்பட்டது.