உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஹோட்டல் ரம்யா ஸ்கூட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது எந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை ஒதீர்மானங்களாக போயர் நல வாரியம் அமைக்க வேண்டும் கல் உடைக்கும் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி போயர் சமுதாய மக்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் கல்வி வேலை வாய்ப்பு அரசு கட்டுமான பணிகளுக்கு போயர் சமுதாய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் அதேபோல் அரசு வேலை சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் ஆக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவன தலைவர் தேக்கமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட போயஸ் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் இவை அனைத்தும் பின்தங்கிய நிலையிலேயே தான் இருக்கிறது அதிலும் தமிழகத்தில் எங்களின் ஓட்டுக்கள் பெறவே அதிமுக திமுக இரு கட்சிகள் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தேர்தல் அறிக்கையில் மட்டும் அறிவித்துவிட்டு ஆட்சி அமைத்தவுடன் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பேசுவதில்லை எனவே இந்த முறை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை அறிவித்துள்ளார்.