நீலகிரி தொகுதி்யில் இன்று காலை வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது. தற்போதைய எம்.பியான திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனு, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆ. ராசாவின் வேட்புமனுவில் குளறுபடிகள் இருப்பதால் நிறுத்திவைக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்தார். அதே நேரத்தில் பாஜக வேட்பாளர் மத்திய அமைச்சர் முருகன் வேட்புமனு ஏற்கப்பட்டது.