உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை போல், தற்பொழுது தமிழகத்தில் கோடை வையில் உக்கிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரியலூர் நகர போக்குவரத்து காவல்துறையின் சார்பில் பொதுமக்கள் மற்றும் போலீஸ் ஆகியோருக்கு நீர்மோர் மற்றும் தண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது. அரியலூர் அண்ணா சிலை அருகே உள்ள காவலர்
கேண்டினில் நீர்மோர் வழங்கும் திட்டத்தை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தர்பூசணி ஜூஸ், நீர்மோர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார்.
கோடை வெயிலின் தாக்கம் குறையும் வரை பொது மக்களுக்கும், மாவட்ட முழுவதும் பகலில் காவல் பணிகள் ஈடுபடும் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவலர்களுக்கும் நேர் மோர் வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறினார்.
நிகழ்ச்சியில் அரியலூர் சைபர் கிரைம் ஏ டி எஸ் பி அந்தோணி ஆரி, டிஎஸ்பி சங்கர் கணேஷ், தனிப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி, ஆயுதப்படை ஆய்வாளர் பாலு, போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.