கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி. மலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்றுபோட்டியில் 18 காளைகள் விடப்பட்டன. இதில் 75 வீரர்கள் களம் கண்டனர். இதில் வீரர்கள் யாரும் காயமடையவில்லை. பெரும்பாலான காளைகள் மைதானத்தில் வீரர்களின் திறமைகளை சோதிக்கும் வகையில் காளைகள் திறமையாக சீறிப்பாய்ந்து வெற்றிகளை தட்டிச்சென்றது.
மணப்பாறையைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கவிப்பிரியா, தனது தாயுடன் வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கள் காளையை களம் இறக்கினார். அந்த காளை வீரர்களிடம் பிடிபடாமல் மைதானத்தில் சீறிப்பாய்ந்தது. இதனால் காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
.