திருச்சி மாநகராட்சி, கோ-அபிஷேகபுர கோட்டத்திற்குட்பட்ட (மண்டல்.எண்.5), 28- வது வார்டு தென்னூர்,அண்ணாநகர் 2 கிராஸ் விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தனிநபரால் தொடர்ந்து கட்டிடக் கழிவுகள், சாக்குகள், சாக்கடைக் கழிவுகள் போன்ற கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கழிவுகள் கொட்டுவதைக் கண்டித்தும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடும் மைதானத்தில் இந்த செயல் தொடர்கதையாகி
வருகிறது.இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்று செயல்பாடுகளில் ஈடுபட்ட நபர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்தும், கழிவுகள் சேராமலிருக்கவும், கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுகள் ஏதேனும் ஏற்படும் முன்பாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.