அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் நேரு இன்று குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினார். தோகைமலை அடுத்த கொசூரில் பிரசாரம் செய்தபோது அமைச்சர் நேருவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சோர்வாக காணப்பட்ட அவரிடம் கட்சி நிர்வாகிகள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள் என கேட்டனர். மயக்கமாக இருக்கிறது. மருத்துவமனைக்கு செல்கிறேன். குடிநீர் பிரச்னை உள்பட எந்த பி்ரச்னையானாலும் தமிழ்நாடு அரசு தீர்த்து வைக்கும். மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு இன்னொரு முறை இங்கு வருவேன் என கூறிவிட்டு பிரசார வாகனத்தில் இருந்து இறங்கினார்.
பின்னர் காரில் ஏறி திருச்சி மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.