தமிழ் நாடு முழுவதும் நேற்ற மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு ஆதாரமாக விளங்கும் காளைகளை போற்றும் வகையில் தமிழர்கள் தொன்று தொட்டு இந்த விழாவை கொண்டாடி வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேற்று திருவள்ளூர் அருகே உள்ள தனது பண்ணைக்கு சென்று அங்குள்ள மாடுகளுக்கு பொங்கல் விழா நடத்தினார். அத்துடன் அங்கு பொங்கலும் வைக்கப்பட்டது. மாடுகளுக்கு பொங்கல் மற்றும் காய்கனிகள், கீரைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள்கிருத்திகா மற்றும் பேரன் ஆகியோரும் பங்கேற்றனர்.