சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று தனது வேட்பு மனுவை, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர்கள் நீலமேகம், மகாலிங்கம், தமிழ், தந்தை ரகுநாதன், ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகள் அதிகம் இருப்பதால் 40டண்ணுக்கு மேலான சிமெண்ட் லோடுகளை ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் மிகவும் மோசம் அடைந்துள்ளது எனவே இச்சாலைகளை சீரமைக்க பாடுபடுவேன். ஆலத்தூர் ஒன்றியத்தில் வெங்காயம் சேமித்து வைக்க குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும். என்எல்சி தொழிற்சாலைக்கு நிலம் திருப்பி அளிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்த நிலங்களில் வேளாண்மை செய்ய தேவையான உதவிகள் செய்யப்படும்.
நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன என்று என்பது சதவீத மக்கள் கேட்டு வருகின்றனர். இதுவே பேசுபொருளாக உள்ளதால் சின்னம் கிடைத்த இரண்டு நாட்களில் எளிதாக எங்களுக்கு சின்னத்தை கொண்டு சேர்க்க முடியும். தென்னம் பறிப்பு எங்களது மனதை வேதனைப்படுத்தவும் ஒரு கட்சியின் வேகத்தை தொய்வாக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கின்றோம் மாற்றுச் சின்னத்தை கூட வழங்கி இருக்கலாம் ஆனால் எங்களை மேலும் மேலும் தொய்வு ஏற்பட நடவடிக்கை மேற்கொண்டாலும் சின்னம் கிடைத்த இரண்டு நாட்களில் நாங்கள் இதை பொதுமக்க இடம் கொண்டு சேர்ப்போம் என்று கூறினார்.
மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தையே மீண்டும் அரசாங்கம் செலவு பண்ணுகின்றது ஆனால் இதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வில்லை நாங்கள் மக்களின் வாழ்க்கை உயர்வடைய பாடுபடுவோம் அண்டை நாடான இலங்கையில் பொருளாதாரத் துறைவால் அரிசி கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை இந்தியாவிற்கு வராது என்ற உத்தரவாதம் இல்லை. மக்கள் ஒரு மாற்றத்திற்கான அரசியலை கையில் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி கூறினார்.