விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று விருதுநகர் கலெக்டரிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது ராதிகாவின் கணவர் சரத்குமார் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே நின்றார். அப்போது அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் வேட்புமனு தாக்கல் செய்ய அங்கு வந்தார்.
அவரைப்பார்த்த சரத்குமார் அவரை தட்டிக்கொடுத்து வாழ்த்தினார். ராதிகாவும் விஜய பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்தார். எதிர் எதிராக போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்ட நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.