தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை பல்வேறு எதிர்க்கட்சிகள் வைத்துள்ளன. இந்த நிலையில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி மதிமுக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என மார்ச் 7ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
ஆனால் இன்று 25ம் தேதி ஆன நிலையிலும் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் திருச்சி மக்களவை தொகுதியில் மதிமுக வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவர் பிரசாரம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. சின்னம் ஒதுக்கப்பட்டால் தான் தங்கள் சின்னத்துக்கு வாக்கு அளியுங்கள் என கேட்க முடியும். எனவே மதிமுக வேட்பாளர் பி்ரசாரம் முடக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர்களின் பிரசாரத்தை முடக்க தேர்தல் ஆணையம் துணை போகிறது என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. இந்த நிலையில் மதிமுக சார்பில் மீண்டும் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடுங்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.