திருச்சியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சி விமானநிலையம் வந்து செல்கின்றனர். இன்று மதியம் 1.50 மணியளவில் திருச்சி ஏர்போர்ட் டெர்மினல் மேனேஜரின் போனுக்கு பேசிய மர்ம நபர், திருச்சி ஏர்போர்ட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு போனை வைத்து விட்டார். இதனையடுத்து ஏர்போர்ட் பாதுகாப்பை கவனித்து வரும் சிஐஎஸ்எப் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். திருச்சி மாநகர போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சுமார் 2 மணி நேரம் தீவிர சோதனைக்கு பின்னர் அது வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் ஆசாமி நம்பர் யாருடையது என்பது குறித்து திருச்சி மாநகர சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
Tags:திருச்சி ஏர்போர்ட்