தமிழகத்தை பொறுத்தவர திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை சந்திக்கிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வத்துக்கு அடுத்தடுத்து தமிழக அரசியலில் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சி, சின்னம், கொடிகளை பயன்படுத்தக்கூடாது என அடுத்தடுத்து ஓ பன்னீர் செல்வத்திற்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு வரும் ஓபிஎஸ்சுக்கு பாஜக கூட்டணியிலும் ஓரு சீட்டு தான் ஓதுக்கப்பட்டுள்ளது. தனது பலத்தை நிருபிக்க அவர் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ் ஏற்கனவே இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ள நிலையில் சுயேட்சையாக போட்டியிட்டால் அவர் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து எம்எல்ஏ பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறப்பட்டன. ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்ய பிறகு இது தொடர்பான மனுவுடன் இபிஎஸ் தரப்பினர் கோர்ட்டுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் தற்போது அதிமுகவில் உறுப்பினர் பதவியில் கூட இல்லாததால், எம்எல்ஏ பதவியை ஓபிஎஸ் இழக்க மாட்டார் என்று ஓ தரப்பினர் கூறுகின்றனர். ஓ பன்னீர் செல்வம் தற்போது அதிமுகவில் இல்லை. அந்த கட்சி ஓ பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டது. எனவே அவர் சட்டமன்றத்திலேயே அவர் ஒரு சுயேட்சை உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவர் அதிமுக உறுப்பினர் இல்லை. எனவே ஒரு சுயேச்சை உறுப்பினர், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது என்பது கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி தடை ஆகாது என ஓபிஎஸ் தரப்பினர் விளக்கம் அளிக்கின்றனர்…