ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் சரவணன் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகர துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஐபிஎஸ் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் .
குறிப்பாக, நம்முடன் படிக்கும் நண்பர்களே நம்மை போதைக்கு அடிமையாக்கும் வகையில் மச்சான், நண்பா ஒரு முறை எனக்காக சாப்பிட்டு பார் என ஆசை வார்த்தை கூறி நம்மை போதைக்கு அடிமையாக்கி விடுவார். பின்னர் போதைப் பொருட்ளை அருந்தவே திருடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவோம். தொடர்ச்சியாய் பல குற்றங்களுக்கும் இந்த போதைப் பொருள் அருந்துவது காரணமாக அமையும். எனவே யார் சொன்னாலும் போதைப்பொருட்களை ஒரு முறை டேஸ்ட் பார்கலாம் கூட எண்ணாதீர்கள்” இவ்வாறு மாணவர்களுக்கு, அறிவுரை வழங்கினார்.