கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளை காங்கிரஸ் ஏற்கனவே அங்கு தொடங்கி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடகம் வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த பிரமாண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றார். அடுத்தடுத்த அறிவிப்புகளில் கர்நாடகத்தில் காங்கிரஸ் முன்னணிக்கு வந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு மாநகராட்சியின் பட்ஜெட் 8 ஆயிரம் கோடிக்கு போட்டால் அதில் 3200 கோடியை பா.ஜகவினர் தங்கள் பங்கு என ஒதுக்கி விடுகிறார்கள் என்றும் பிரியங்கா குற்றம் சாட்டினார். அவரது பேச்சை கேட்க பல்லாயிரகணக்கான பெண்கள் வந்திருந்தனர். அத்துடன் பெண்களுக்காகவே சிறப்பு தேர்தல் வாக்குறுதி விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியபோது பெண்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.