மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை சார்பாக திருவள்ளுவர் திருநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருத்தேர் நகர்வல பேரணி நடைபெற்றது. திருத்தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு விசித்ராயர் வீதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இருந்து திருவள்ளுவர் திருத்தேர் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
திருக்குரள் பேரவை தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற திருத்தேர் பேரணியில் மாணவர்கள் மற்றும் நாடக கலைஞர் திருவள்ளுவர் வேடமணிந்து திருவள்ளுவரின் பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளுவரின் திருமறைகளை பாடி தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் திருக்குறளை உலகிற்கு தந்த திருவள்ளுவரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பேரணியாக சென்றனர். தொடர்ந்து திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் பாராட்டு விழா விருது வழங்கும் விழா நடைபெற்றது.